திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு முகாம்

ராசிபுரத்தில் இன்னர் வீல் கிளப் சார்பில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் இன்னர்வீல் கிளப் சார்பில் டிவிஎஸ் சாலையில் உள்ள ஜே சி எஸ் ஸ்கேன் சென்டரில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இன்னர் வீல் சங்கபொருளாளர் திருமதி.அமலா கண்ணன், இன்னர் வீல் சங்க கடவுள் வாழ்த்து பாடினார். இன்னர்வீல் சங்கத் தலைவி திருமதி சரோஜா குமார் தலைமை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார். நாமகிரிப்பேட்டையில் இருந்து 13 திருநங்கைகள் வந்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர் விஜயலட்சுமி (மனநல மருத்துவர்), திருநங்கைகளின் மனநலம் உடல்நலம் பற்றி மிகவும் சிறப்பாக விளக்கம் அளித்தார். திருநங்கைகளின் தலைவி மாளவிகா, அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை பற்றியும், தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் பிரச்சனைகளை பற்றியும் மிகவும் வெளிப்படையாக எடுத்துரைத்தார். உறுப்பினர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு திருநங்கைகள் பதிலளித்தனர். இக்கருத்தரங்கம் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. திருநங்கைகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு இரண்டு ஆடுகள் வாங்கித் தருவதாக சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது..

விமன் டாக்டர்ஸ் அசோசியேசன் தலைவி சித்ரா சுரேந்திரன் மற்றும் சுரேந்திரன் இவ்விழா நடப்பதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் இன்னர் வீல் சங்க முன்னாள் மாவட்ட தலைவி தெய்வானை ராமசுவாமி, ஜெயலட்சுமி ரங்கராஜன், சித்ரா சுரேஷ் குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்னர்வீல் சங்க செயலாளர் சுதா மனோகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story