கீரிப்பாறை அருகே சடலமாக கிடந்த திருநங்கை

கீரிப்பாறை அருகே சடலமாக கிடந்த திருநங்கை
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறை அருகே வீரபுலி பகுதியில் தேனி மாவட்டம் குமுளியை சேந்த சுமன் (33) என்ற திருநங்கை 2 ஆண்டுகளாக வசித்து வந்தார். கூலி வேலை செய்து வந்த சுமன் இன்று காலை வீரபுலி பகுதியில் ரோட்டோரத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கீரிப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். ரோட்டோரத்தில் பிணமாக கிடந்த சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான திருநங்கை சுமனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும். கடந்த வாரம் கன்னியாகுமரி பகுதியில் ரோட்டோரத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்த நிலையில், மேலும் ஒரு திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story