கன்னியாகுமரியில் திருநங்கை மர்ம மரணம்

கன்னியாகுமரியில் திருநங்கை மர்ம மரணம்

காவல் நிலையம்


கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் இன்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுமார் 5 அடி உயரம் உடைய அவர் சுடிதார் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அவரது கையில்"விவேக் லவ்" என்று பச்சை குத்தி இருந்தார். இதற்கிடையில் அங்கு வந்த ஒரு சில திருநங்கைகள் அவரை காட்டு ராணி என்று அழைப்பதாக கூறினார்கள்.

அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

Tags

Next Story