திருநங்கையர் வீட்டில் புகுந்து கத்தியால் வெட்டி நகை பறிப்பு

திருநங்கையர் வீட்டில் புகுந்து கத்தியால் வெட்டி நகை பறிப்பு

எபினேசர்

மதுரவாயல் அடுத்த துண்டலம் அண்ணா நகர், கன்னியம்மன் தெருவில் மடோனா, 25, ஆஷ்சிகா, 21, வருணிகா, 25, ஆகிய மூன்று திருநங்கையர், வாடகை வீட்டில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, காரில் வந்த மர்ம கும்பல், இவர்களது வீட்டில் புகுந்து மிரட்டி ஒரு சவரன் செயின் மற்றும் இரு மொபைல்போன்களை பறித்தனர். அவர்களை தடுக்க முயன்ற மடோனா என்ற திருநங்கையின் தலையில் கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த தகவலின்படி, ரோந்து பணியில் இருந்த போலீசார், மதுரவாயல் பைபாஸ் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்ற காரை சோதனையிட்டனர். அந்த காரில் இருந்து தப்பிக்க முயன்ற நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர், திருமங்கலம் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த எபினேசன், 28, என தெரிந்தது. மேலும், எபினேசர் அரும்பாக்கத்தில் மது அருந்த சென்ற போது, கடை மூடியிருந்ததால், அய்யப்பன் என்பவர் மது வாங்கித் தருவதாக காரில் அழைத்துச் சென்று, திருநங்கையர் வீட்டில் கைவரிசை காட்டியதும் தெரிந்தது. தப்பிய நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மர்ம நபர்கள் மீது ஆத்திரமடைந்த திருநங்கையர், அவர்கள் விட்டுச் சென்ற காரின் கண்ணாடியை உடைத்தனர்.

Tags

Next Story