நாங்க கொடுக்கும் மனுக்கள் குப்பைக்கு தான் போகுது; திருநங்கைகள் வேதனை
நாங்க கொடுக்கும் மனுக்கள் குப்பைக்கு தான் போகுது என, மதுரையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் திருநங்கை வேதனை தெரிவித்தனர்.
மதுரையில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் திருநங்கை வேதனை. அரசு திட்டம் கொடுக்குறாங்கனு விளம்பரம் தான் செய்றாங்க ஆனால் நாங்க கையேந்தி நிற்கிறோம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் கைகளை தட்டி முழக்கமிட்டு வேதனையை கொட்டி தீர்த்தபடி மடி ஏந்தி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த திருநங்கைகள்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு அலுவலகம் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். அதில் இலவச வீடு, வாரிய அட்டை, ரேசன் கார்டு, ஆதார் அட்டை, மாதம் 1000ரூபாயா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினர்.
இந்த முகாமில் கலந்து கொண்டு பேசிய திருநங்கைகள் ; மதுரை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவி தொகைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு வர வில்லை என்றும், நாங்க குடியிருக்கும் வீட்டிற்கு மாதம் ஒரு வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. திருநங்கை என்றால் யாரும் வாடகைக்கு வீடு தரமாட்டேன் சொல்றாங்க. அதனால் எங்களுக்கு தொகுப்பு வீடு தரனும். இதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. நாங்க கொடுக்கும் மனுக்கள் குப்பைக்கு தான் போகிறது. இந்த முறை எங்களது மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
அரசு திட்டம் கொடுக்குறாங்கனு விளம்பரம் தான் செய்றாங்க ஆனால் நாங்க கையேந்தி நிற்கிறோம் என கூறி கைகளை தட்டியபடி முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தபோது மடி ஏந்தியபடி எங்க மனுவுக்கு எதாவது பண்ணுங்க உங்கள சாமி, ஏசு, அல்லா காப்பாத்துவாங்க என அதிகாரிகளை கெஞ்சி ஆசிர்வாதம் வழங்கினர். இந்த குறைதீர் முகாமில் சமூக நலத்துறை அதிகாரிகள், மாவட்ட திருநங்கைகளுக்கான துணைத்தலைவி ருத்ரா, பிரதமர் -சிகா சமூக இயக்கம் சார்பில் பக்கீர் வாவா, பானுமதி மற்றும் மலர் கலந்து கொண்டனர்.