ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் போக்குவரத்து ஆணையர் ஆலோசனை
கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது குறித்து உரிமையாளர்களுடன், போக்குவரத்து ஆணையர், பெரு நகர வளர்ச்சி குழும செயலாளர் ஆலோசனை நடத்தினர்.
இன்று (3.2.2024) சென்னை, எழும்பூர், தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம், ஆகியோர் தலைமையில் கிளாம்பாக்கம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து" ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவது குறித்தும் மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் SETC மேலாண் இயக்குநர் மோகன், தலைமை நிர்வாக அலுவலர் (ம) மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், போக்குவரத்துத் துறை இணை ஆணையர் (விதிகள்) முத்து, SETC பொது மேலாளர் (இயக்கம்) குணசேகரன், MTC பொது மேலாளர் (இயக்கம்) செல்வன், TNSTC துணை மேலாளர் (இயக்கம்) திரு.ரவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.