போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் பென்சனர் சங்க கூட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் பென்சனர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் அரங்கில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் பென்சனர் சங்கத்தின், பெரம்பலூர் கிளை, 9 வது- ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது, மாநில துணை பொது செயலாளர் பச்சையப்பன், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவர், மருதமுத்து மாநில பொது செயலாளர் ஜெயசந்திரன். மாநில பொருளாளர் செல்வராஜ், ஆகியோர் முன்னிலை, வகித்த கூட்டத்தில், ஓய்வு பெற்ற புள்ளியில் துறை உதவி இயக்குனர் ஆதிசிவம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பேரவை கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை நாகப்பட்டினம்கரூர், கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டன். இதில், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் படி நிலுவையில் உள்ள அகவிலைப்படையை உடனடியாக வழங்க வேண்டும் , போக்குவரத்து தொழிலாளர்களின், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், 2022 டிசம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற பண பலன் வழங்க வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன , தமிழ்நாடு அரவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் பென்சனர் சங்கத்தின் பெரம்பலூர் கிளை தலைவர் கந்தசாமி, செயலாளர் கிருஷ்னமூர்த்தி, பொருளாளர், சூரியாகுமார், மற்றும் நிர்வாகிகள், சிக்குராஜ், ரவி, ரவிசந்திரன், மணிவாசகம், சந்திரசேகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story