ஏற்காட்டில் விபத்து நடந்த இடத்தையும் பேருந்தையும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு....
போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
சேலம் ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 5பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தையும், விபத்துக்குள்ளான பஸ்சையும் சேலம் சரக போக்குவரத்து துறை துணை ஆணையர் பிரபாகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் இதுகுறித்து துணை ஆணையர் பிரபாகரன் கூறும் போது, ‘ஆய்வின் போது பஸ்சில் ஸ்டியரிங், பிரேக், கியர் ராடு என அனைத்தும் நல்ல முறையில் இருந்தது. மேலும் டிரைவரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் ஏறும் கியரிலேயே இறங்கினால் விபத்தை தவிர்க்கலாம்’ என்றனர்.