போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பாக தமிழக அரசு 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பாக மண்டல செயலாளர் குருச்சந்திரன் தலைமையில், தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களிடம் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கிட வேண்டும்,ஓய்வூதியதாரர்களின் 100 மாத கால DA அரியர்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கழகங்களில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பி வாரிசு பணிநியமன ஆணையையும் உடனடியாக வழங்கிட வேண்டும் நீதிமன்ற தீர்ப்புகளை அமுல்படுத்தி மேல்முறையீட்டை தவிர்த்திட வேண்டும்,வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை அரசே ஏற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வாயிற்கூட்டம் நடைபெற்றது. இறுதியாக வாயிற்கூட்டத்தில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story