போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து ஊழியர், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும் - செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசே வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் ஒப்பந்தப் பலன், அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்.

01.04.2023 க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும் என்ற 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழகங்களில் செயல்படும், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கும்பகோணம், நாகை மண்டலங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனொரு பகுதியாக, பேராவூரணி அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு டி.கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மத்திய சங்க துணைச் செயலாளர் என்.நவநீதன், சிஐடியு கிளை செயலாளர் ஜி.ரகு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கரிகாலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இதில், ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story