போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்தால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடையும் என்று தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  

கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்தால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடையும் என்று தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் புதிய பஸ் நிலையம் முன்பு அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் கல்வி குமார் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. நேற்று பணிக்கு வந்தவர்கள்தான் பஸ்களை இயக்குகின்றனர். தொழிலாளர்கள் பலர் விடுப்பு எடுத்துள்ளனர். அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் போராட்டம் தீவிரம் அடையும் என்று தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் லட்சுமணன், ராமசாமி, ஆதிராஜ், கருப்பசாமி, தொப்பை கணபதி, முருகேசன் உட்பட போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story