போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

போக்குவரத்து ஊழியர்கள், போக்குவரத்து ஓய்வூதியர்கள், இரண்டாவது நாளாக, நேற்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம் அருகே, சிஐடியு மத்திய சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ், ஏஐடியூசி துணைச் செயலாளர் துரை. மதிவாணன், அண்ணா தொழிற்சங்க பேரவை நீலகண்டன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால், மூத்த தொழிற்சங்க தலைவர் ஆர்.மனோகரன், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, விரைவு போக்குவரத்துக் கழக சிஐடியு மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், அரசுப் போக்குவரத்து கழகம் சிஐடியு மத்திய சங்க பொருளாளர் ராமசாமி, ஓய்வூதியர் சங்கம் ஞானசேகரன், பாஸ்கரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைத்தனர்.

பேராவூரணி

பேராவூரணி சேதுசாலையில் அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்கள் ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு நிர்வாகிகள் ரகு, நவநீதன், அண்ணா தொழிற்சங்கம் ஏசுராஜ், ஜோதி பாஸ்கர், தேமுதிக எஸ்.ஆர்.சீனிவாசன், சக்திவேல், நேதாஜி சங்கம் சேதுராமன், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் சங்கம் டி.கே.ராஜேந்திரன், வீரையன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 35 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில், கும்பகோணம் மண்டல போக்குவரத்து கழகம், புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து கழக, இரண்டு டெப்போ வாயிலிலும், சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஓய்வு பெற்றோர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சங்க நிர்வாகிகள் சாமிஅய்யா, ராஜசேகர், அண்ணா தொழிற்சங்கம் சுப்பையா பாண்டியன், கலைச்செல்வன், ஓய்வு பெற்றோர் சங்கம் தேன் ராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story