எடப்பாடியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைக்கு உடனடியாக தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் கடுமையான போராட்டம் நடைபெறும் என அண்ணா தொழிற்சங்கத்தின் சேலம் மண்டல செயலாளர் சென்னகேசவன் தெரிவித்தார்.
.தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தின் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு போக்குவரத்து பணிமனையில் 60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது... இதனிடையே எடப்பாடி பேருந்து நிலையத்தில் அண்ணா தொழிற்சங்கத்தின் சேலம் மண்டல செயலாளர் சென்னகேசவன் தலைமையில் அரசு பேருந்துகளை இயக்கி வந்த தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. அப்போது காவல்துறையினர் மறுப்பு தெரிவித்ததால் அண்ணா தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. சமரசமடைந்த பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணா தொழிற்சங்கத்தின் சேலம் மண்டல செயலாளர் சென்னகேசவன் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஊதிய ஒப்பந்தம் வழங்கியது போல வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும், இல்லை என்றால் கடுமையான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பேட்டி அளித்தார். அப்போது சேலம் மண்டல தலைவர் நல்லப்பன், எடப்பாடி அரசு போக்குவரத்து பணிமனையின் அண்ணா தொழிற்சங்க தலைவர் சக்திவேல், செயலாளர் மாதேஸ்வரன் உட்பட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story