போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - பொதுமக்கள் அவதி

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் -  பொதுமக்கள்  அவதி

பேருந்து இயக்கம் 

திருச்சி மாவட்டத்தில் 60% அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதால் புறநகர்ப் பகுதிகளில் பள்ளி, கல்லுாாிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் அவதி அடைந்தனா் .

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மேற்கண்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், சொந்த ஊருக்கு செல்பவர்கள், பணி நிமித்தமாக வெளியிடங்களுக்கு செல்பவர்கள் கடும் பாதிப்படைந்தனர்.

இதேபோல பள்ளி, கல்லுாாிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் அவதி அடைந்தனா். பெரும்பாலான நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால் ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. தனியார் பேருந்துகளிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. ஆனால், திருச்சி மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, நாகை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மொத்தம் 1,927 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். ஆனால், வேலை நிறுத்தம் காரணமாக 1599 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story