அபத்தான முறையில் பயணம் - பொதுமக்கள் அச்சம்

அபத்தான முறையில் பயணம் - பொதுமக்கள் அச்சம்

மானாமதுரையில் மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் டிராக்டர்கள் செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


மானாமதுரையில் மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் டிராக்டர்கள் செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மானாமதுரை ஊரக மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக மின் கம்பங்கள் அமைப்பதற்காக மெயின் ரோடுகளில் டிராக்டர்களில் ஆபத்தான முறையில் மின்கம்பங்களை கொண்டு செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு புதிதாக மின் இணைப்பு வழங்குவதற்காக ஆங்காங்கே மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சேதமடைந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மானாமதுரை சிப்காட் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து கம்பங்களை மானாமதுரை நகர் பகுதி மெயின் ரோடு வழியாக டிராக்டர்களில் ஆபத்தான முறையில் கொண்டு செல்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பங்களை உரிய பாதுகாப்போடு டிராக்டர்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story