கழிவுநீர் சூழ்ந்த பயணியர் நிழற்குடை நோய் அபாயம்

கழிவுநீர் சூழ்ந்த பயணியர் நிழற்குடை நோய் அபாயம்

நிழற்குடை

கழிவுநீர் சூழ்ந்த பயணியர் நிழற்குடை நோய் அபாயம்
திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட குண்டுமேடு பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நெடுஞ்சாலையோரம் நிழற்குடையை பகுதிவாசிகள் பயன்படுத்தி பூந்தமல்லி, சென்னை மார்க்கமாக சென்று வருகின்றனர். இப்பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நெடுஞ்சாலையோரம் நிழற்குடை அருகே குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீரில் கொசு உற்பத்தியாவதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் சிரமப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் கொஞ்ச துாரம் தள்ளி நிற்பதால் பேருந்தில் ஏறும் பயணியர் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சூழ்ந்துள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story