கடலில் பயணம் செய்து, பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு

கடலில் பயணம் செய்து, பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு

கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிப்பதை தவிர்க்க வலியுறுத்தி, புதுச்சேரி - நெல்லுார் இடையே, விளையாட்டு வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிப்பதை தவிர்க்க வலியுறுத்தி, புதுச்சேரி - நெல்லுார் இடையே, விளையாட்டு வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிப்பதை தவிர்க்க வலியுறுத்தி, புதுச்சேரி - நெல்லுார் இடையே, நின்றவாறு துடுப்பு செலுத்தும் விளையாட்டு வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடலில் நின்றவாறு துடுப்பு செலுத்தும் விளையாட்டை மேம்படுத்த, 'எஸ்.யு.பி. மெரினா' என்ற அமைப்பு, சென்னையில், மீனவ வீரர்களுடன் செயல்படுகிறது. அதன் சார்பில், கடலில் பிளாஸ்டிக் குப்பை குவிப்பதை தவிர்க்க வலியுறுத்தி, இத்தகைய விளையாட்டு வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தற்போது, சென்னையை சேர்ந்த நான்கு பேர், கோவளத்தைச் சேர்ந்த மூன்று பேர், புதுச்சேரி கடற்பகுதியில் துவங்கி, தமிழக கடற்பகுதி கடந்து, ஆந்திர மாநிலம் நெல்லுார் வரை, நின்றவாறு துடுப்பு செலுத்தி, 350 கி.மீ.,க்கு பயணம் செய்து, பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம், புதுச்சேரியில் துவங்கி, செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் வந்தனர். நேற்று காலை, சதுரங்கப்பட்டினத்தில், தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலர் அப்துல்மாலிக், இப்பயணத்தை துவக்கி வைத்தார். பயணக் குழுவின் தலைவர் சதீஷ்குமார், எட்டாம் வகுப்பு பயிலும், 12 வயது சிறுவன் ஹனீஷ் உள்ளிட்டோர் தங்களின் பயணத்தை துவக்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story