மருத்துவம் படிக்காத அதிமுக நிர்வாகி நோயாளிகளுக்கு சிகிச்சை !!

மணப்பாறை அருகே மருத்துவம் படிக்காத அதிமுக நிர்வாகி நோயாளிகளுக்கு ஊசி போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி, கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர் அதிமுகவில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் அலோபதி மருத்துவம் படிக்காமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனது வீட்டில் தினமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. சாதாரணப் காய்ச்சல் முதல் எலும்பு மூட்டு சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பது வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story