குடியிருப்பு பகுதியில் புகுந்த மானை வெறிநாய்கள் கடித்து சிகிச்சை !

குடியிருப்பு பகுதியில் புகுந்த மானை  வெறிநாய்கள் கடித்து சிகிச்சை !

மான்

திருத்தணி அருகே தண்ணீர் தேடி வழி தவறி குடியிருப்பு பகுதியில் புகுந்த மானை வெறிநாய்கள் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அருகில் உள்ள காப்புக்காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி கனகம்மாசத்திரம் பஜாருக்குள் புகுந்தது. இதனைக் கண்ட தெரு நாய்கள் புள்ளிமானை துரத்தி துரத்தி கடித்தது. இதில் படுகாயம் அடைந்த மானை அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு கனகம்மாசத்திரம் உள்ள கால்நடை மருத்துவமனையில் அனுமதித்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருத்தணி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளி மானை மீட்டு திருத்தணியில் உள்ள காப்பு காட்டில் விட்டனர். பின்னர் இந்தப் பகுதியில் இது போன்று தொடர்ந்து காப்புக்காட்டில் இருந்து மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து பலத்த காயம் அடைகிறது. ஆகையால் காப்பு காட்டில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story