துளிகள் அமைப்பின் சார்பில் கவலக்காட்டுவலசு பகுதியில் மர நடும் விழா
காங்கேயம் துளிகள் அமைப்பின் சார்பில் காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது, குளம் குட்டைகளை தூர் வார்வது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.மேலும் சிவன்மலை ஊராட்சி உடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரிய வகை மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர்.
இதுவரை பல கட்டங்களாக 25 ஆயிரத்து 450 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று 138வது கட்டமாக கீரனூர் ஊராட்சி, கவலக்காட்டுவலசு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இவ்விழாவில் கீரனூர் ஊராட்சித் தலைவர் பி. ஈஸ்வரமூர்த்தி, திரு செந்தில் முருகன் இண்டஸ்ட்ரீஸ் சி.பி. முருகேசன், ஸ்ரீ முருகன் கார்ஸ் பி. தங்கவேல், ஸ்ரீ அம்மன் ரைஸ் மில் பி. மகேஷ்குமார், கவலக்காட்டுவலசு ஊர் பொதுமக்கள், காங்கேயம் துளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.