ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் பிறந்தநாள் முன்னிட்டு மரம்நடும் விழா
ராமநாதபுரம் முள் விளையும் பூமியான ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் நம்ம ஊர் திருப்புல்லாணி குழு மற்றும் ஐ சி ஐ சி ஐ ஃபவுண்டேஷன் சார்பில் சுமார் 600 மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மேலும் நிழல் தரும்மரங்கள் இப்பகுதியில் மிகவும் குறைவாக இருப்பதாலும் கடற்கரைப்பகுதியான இங்கு அதிகமான உவர்ப்பு தன்மை இருப்பதால் தினந்தோறும் குடிநீர் வாகனங்களின் தண்ணீர் எடுத்து வந்து மரங்களை வளர்க்க இக்குழு முயன்று வருகின்றனர்.
இதில் மாமரங்கள், வாழை புங்கன், அத்தி, மாதுளை, கொய்யா, சப்போட்டா, போன்ற பழக்கன்றுகளும் தென்னை, நீர்மருது சீத்தாப்பழம், போன்ற மரங்களை பாலசுப்பிரமணிய சாமி கோயில் பகுதியில் ரத்தினகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராஜபாரதசாரதி ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி மரக்கன்றுகளை நட்டார்.