காந்த மலை பாலதண்டாயுதபானி கோவிலில் மரம் நடவு பணி
மரம் நடவு
கோவை இராம கிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து மோகனூர் காந்த மலை பாலதண்டாயுதபானி கோவில் வளாகத்தில் இராசிக்குரிய மரங்கள் நடவு செய்தனர். இவ்விழாவில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் காந்த மலை அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி தலைமை வகித்தார். பசுமை நாமக்கல் செயலாளர் மா.தில்லை சிவக்குமார் வறவேற்புரை ஆற்றினார் முன்னிலை உரையை தங்கம் மருத்துவமனை மருத்துவர் இரா. குழந்தைவேல்,வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மாணிக்கம், இணைச் செயலாளர் அருணாசலம், இராசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, மருத்துவர் ஜனார்த்தனன் ஆகியோர் ஆற்றினர். வித்யாலயா முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் குருவாயுரப்பன் கோவில் தல வரலாறு பற்றி சிறப்புரை ஆற்றினார் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கந்தர் சஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்பட்டது. விழாவில் இறுதியாக மோகனூர் அரசினர் மேல்நிலைபள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags
Next Story