நர்சிங் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

X
ரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கிளியனூரில் உள்ள ரங்க பூபதி நர்சிங் கல்லூரியில் பருவமழையை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி சேர்மன் வக்கீல் ரங்கபூபதி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். டாக்டர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் வினிதா வரவேற்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சுசித்ரா, இந்துமதி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story