திருப்பத்தூர் அருகே மரங்கள் தீயில் கருகி சேதம்

திருப்பத்தூர் அருகே மரங்கள் தீயில் கருகி சேதம்

தீயில் எரிந்து நாசம் 

திருப்பத்தூர் அருகே மர்ம நபர்கள் சிகரெட் பிடித்துபோட்டதால் மாந்தோப்பில் உள்ள மரங்கள் தீயில் கருகிய சேதம் அடைந்தது.

திருப்பத்துர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்னூர் பகுதியை சேர்ந்த சையத்பாபு மகன் அமீர் (52) இவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்பு உள்ளது. இந்த மாந்தோப்பில் அமர்ந்து குடிமகன்கள் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இன்று அதே போல் மது அருந்த வந்த மர்ம நபர்கள் சிகரெட் புகைத்து அதன் தீயை மாந்தோப்பில் வீசியுள்ளனர். வெயிலின் காரணமாக மாந்தோப்பில் காய்ந்த நிலையில் இருந்த புற்களில் மற்றும் சரகுகள் தகதகவென தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதன் காரணமாக மர்மநபர்கள் அங்கு இருந்து தப்பி சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அறிந்த மாந்தோப்பின் உரிமையாளர் அமீர் திருப்பத்துர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் அமீர் மற்றும் அவருடைய உறவினர்கள் ஒன்றிணைந்து செடிகளால் அடித்து தீயை அனைத்தனர். சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு துறையினர் வந்து அணைத்தனர்.

மேலும் இரண்டரை ஏக்கர் அளவில் உள்ள மாமரங்கள் தீ பட்டு கருகி உள்ளதாக உரிமையாளர் வேதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story