மரங்கள் மக்கள் இயக்க சிறப்பு கூட்டம்
மரக்கன்றுகள் நடவு
தூத்துக்குடி மாவட்டம் மரங்கள் மக்கள் இயக்கம் விளாத்திகுளம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மரங்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் ஈர்க்கப்பட்டு மாசார்பட்டி கிராமத்தில் 30 நபர்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். மேலும், அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு பேர் சூட்டு விழாவும் நடைபெற்றது. அதில் 15பேர் கொண்ட ஒரு குழுவிற்கு புங்கன் மரங்கள் மக்கள் இயக்கம் மகளிர் குழு மற்றும் வேம்பு மரங்கள் மக்கள் இயக்கம் மகளிர் குழு என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு மரங்கள் குறித்தான நன்மைகள் குறித்து அன்றாடம் ஒவ்வொரு மரத்தை எவ்வாறு பராமரிப்பது அதனால் என்ன பலன்கள் என பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். நிகழ்வில், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாத்துரை, மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி கார்த்திகை முருகன், ஒன்றிய துணை செயலாளர் பாலையா, ஊராட்சி மன்ற துணை தலைவர் மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக்குமார், கிளை செயலாளர்கள் சண்முகம், செல்லத்தாய் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.