100நாள் பணியாளர்கள் மூலம் மரம் நட வேண்டும் : எம்பவர் கோரிக்கை

100நாள் பணியாளர்கள் மூலம் மரம் நட வேண்டும் : எம்பவர் கோரிக்கை

எம்பவர் கோரிக்கை

100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்களை பயன்படுத்தி மரங்கள் வளர்த்து தமிழ்நாட்டை வறட்சியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்களை இது தொடர்பாக எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு "தமிழ் நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள் 38, கிராம பஞ்சாயத்துகள் 12,618, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் குறைந்தது 5 குக்கிராமங்கள் இருக்கும்.

அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம் நடைமுறையில் உள்ளது. 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிவோர் மூலம், மாதம் ஒரு செடி மட்டுமே நட்டு பராமரித்து வந்தால் நம் கிராமங்கள் பசுமையான கிராமங்களாக மாறிவிடும். 12,618 கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் 50 பேர் பணிபுரிகிறார்கள் எனில் 12,618 × 50 ஸ்ரீ 6,30,900 நபர்கள் மாதம் ஒரு செடி நடவு எனில் 6,30,900 எனில் 12 மாதங்களுக்கு 6,30,900×12 ஸ்ரீ 75,70,800. தமிழ்நாட்டை பொறுத்த வரை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் மழைக்காலங்கள் ஆகும்.

இந்த காலங்களில் செடி நடவு செய்து ஒரு வருட காலம் பராமரித்தால்; மரங்கள் வேர்களில் சேமித்து வைத்துள்ள ஈரத்தன்மையால் தானாக வளர்ந்து விடும். இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து, நமக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம்.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் செடிகள் நடவு செய்ய தேவைப்படும் செடிகள், வனத்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியோர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

Tags

Next Story