காஷ்மீர் to கன்னியாகுமரி வரை நடைப்பயணம்

காஷ்மீர் to கன்னியாகுமரி வரை தேசியக் கொடியுடன் விழிப்புணர்வு நடைப்பயணம் செய்யும் இளைஞர்கள்
காஷ்மீர் to கன்னியாகுமரி 5,000 km NH வழியாக நடைப்பயணம்! ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 2 இளைஞர்கள் 5,000 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்டு தேசிய சமூக ஒருங்கிணைப்புக் குழு செயல்படுகிறது. இந்த குழுவில் உள்ள 10 ஆயிரம் பேர், ஆரோக்கியமான இளைஞர்கள், ஆரோக்கியமான இந்தியா என்ற தலைப்பின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபயணம் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பட்டதாரி இளைஞர்களான ஹரியானாவைச் சேர்ந்த தீபக்யாதவ்(24), ராஜஸ்தானைச் சேர்ந்த ஹிராலால் மஹாவர்(27)ஆகிய இருவரும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 5,000 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொள்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் .17–இல் தேசியக் கொடியுடன் காஷ்மீரில் இவர்கள் தொடங்கிய விழிப்புணர்வு நடைபயணம் இமாச்சல்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, தில்லி, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகம் வழியாக ஜனவரி.31–இல் தமிழகத்தை வந்தடைந்துள்ளனர். பிப்ரவரி 8–இல் கன்னியாகுமரியில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர். 90 நாள்களில் நடைபயணத்தை முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இளைஞர்கள் ஆர்வமுடன் செல்கின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story