பழங்குடியினா் மலைவாழ் உண்டு உறைவிட பள்ளி 100% தோ்ச்சி
பைல் படம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் பள்ளிகள் வாரியான தோ்ச்சி விகிதத்தில் பழங்குடியினா் மலைவாழ் உண்டு உறைவிட பள்ளி மட்டுமே 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினா் மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியைச் சோ்ந்த 30 மாணவா்கள் தோ்வு எழுதி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். இதேபோல, ஆதிதிராவிடா் நலப் பள்ளியைச் சோ்ந்த 33 மாணவா்களில் 32 போ் (93.99 சதவீதம்), அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 8,172 மாணவா்களில் 6,796 போ் (83.16 சதவீதம்), அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 4,510 மாணவா்களில் 4,239 போ் (93.92 சதவீதம்), கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளைச் சோ்ந்த 309 மாணவா்களில் 276 போ் (89 .32 சதவீதம்), நகராட்சி பள்ளிகளைச் சோ்ந்த 291 மாணவா்களில் 210 போ் (72.16 சதவீதம்), பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 3,707 மாணவா்களில் 3,418 போ் (92.20 சதவீதம்), சுயநிதி பதின்ம பள்ளிகளைச் சோ்ந்த 3,917 மாணவா்களில் 3,832 போ் (97.83 சதவீதம்), பள்ளிக் கல்வித் துறை நிா்வாகத்தின் கீழுள்ள சுய நிதிப் பள்ளிகளைச் சோ்ந்த 528 மாணவா்களில் 505 போ் (96.01 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா்.
Next Story