மேட்டூரில் பழங்குடியின மக்கள் சாதி சான்று கேட்டு ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் பழங்குடியின மக்கள் சாதி சான்று கேட்டு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் ,மேட்டூரில் பழங்குடியின மக்கள் சாதி சான்று கேட்டு ஆர்ப்பாட்டம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் வருவாய் கோட்டத்தில் பண்ணவாடி, பூதப்பாடி, கொளத்தூர், தாளவாடி, பெரியகொட்டாய், கண்ணாமூச்சி, சிங்கிரிப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, புதுவேலமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் கொண்டாரெட்டீஸ் சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்து நீண்டகாலமாக காத்திருக்கின்றனர். சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சென்ற சிலர் மட்டுமே கொண்டாரெட்டீஸ் பழங்குடியினர் சான்று பெற்றுள்ளனர். உயர்நீதி மன்ற வழிகாட்டுதல்மற்றும் தமிழ்நாடு அரசு ஆணைப்படி மேட்டூர் வட்டாரத்தில் உள்ள கொண்டாரெட்டீஸ் மக்களுக்கு காலம் தாழ்த்தாமல் பழங்குடியின சாதிச்சான்று வழங்கத்கோரி இன்று மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கொளத்தூர் ஒன்றிய தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ டில்லிபாபு போராட்டத்தை விளக்கி பேசினார். கொண்டாரெட்டீஸ் சாதிச்சான்று கேட்டும், சாதிச்சான்று வழங்க மறுக்கும் சார் ஆட்சியரை கண்டித்தும் கோஷமிடப்பட்டது. பின்னர் மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணியிடம் மணு அளித்தனர்.

Tags

Next Story