பழங்குடியின பெண் நீதிபதி தேர்வில் வெற்றி

பழங்குடியின பெண் நீதிபதி தேர்வில் வெற்றி

பழங்குடியின பெண் நீதிபதி தேர்வில் வெற்றி

புலியூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் நீதிபதி தேர்வில் வெற்றி அடைந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்ற நல்தந்தைதாய் மாரே, - நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றையநாள் பெண்கல்வி யாலே, - முன் னேற வேண்டும் வைய மேலே!” என வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story