கடலில் உயிரிழந்த பயிற்சி மருத்துவர்களுக்கு நினைஞ்சலி
மருத்துவ மாணவர்களுக்கு நினைவஞ்சலி
நாகர்கோவிலில் கடலில் குளிக்க சென்ற பயிற்சி மருத்துவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகேயுள்ள லெமூர் கடற்கரையை பார்வையிட திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி பயிற்சி மாணவர்கள் சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி உட்பட 20 பேர் வந்தனர்.
இதில் 5 பேர் அலையில் சிக்கி பலியாகினர். பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாக அரங்கம் முன்பு வைத்து இன்று காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story