மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு மரியாதை

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு மரியாதை

மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பாக தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது


மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பாக தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது

தமிழ் சித்திரை முதல்நாளை வரவேற்கும் புத்தாண்டை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு புத்தாடையாக பச்சைப் பட்டுடுத்தி, பொங்கல் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியானது, மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பாக முன் னெடுக்கப்பட்டு, நிறுவனர் அவனிமாடசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில், முன்னாள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.தனபால்,தமிழ்நாடு அரசுநெடுஞ்சாலைத்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் ஏ.கே.ராஜதுரை வேல்பாண்டியன்,தொழிலதிபர் என்.அகிலன்,மதுரை மாட்டுத்தாவணி காய்கனிகள் வியாபாரிகள் சங்கத்தலைவர் பி.மோகன்ராஜ். எம்.டி.சி வங்கி ஆர்.மாடசாமி, இலக்கிய மன்றத்தின் செயலாளர் கு.சிலம்பரசன்,மன்றத்தின் துணைத் தலைவர் சுகுனேஸ்வரி ரவிக்குமார், மதுரை மாநகராட்சி பள்ளிகளின் கண்காணிப்பாளர்நா.

கபிலன், அவனியாபுரம் இரா.செல்வம் ,முனிச்சாலை ஜெ.பாண்டியராஜன்,அழகர்கோவில் மலர்வண்ணன், ஆலங்குடி முருகன், கவிஞர் பொன்பாண்டி செய்தியாளர் புஷ்பராஜன், ஆலங்குடி முருகன்,கணேச பாண்டியன்,கவிஞர் துளிர், மற்றும் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்விஜயா,ஜெயலட்சுமி,சிவகலா, மானாமதுரை முனைவர் மீனாட்சி சுந்தரம், ரத்னா, கவிதா, அமுதா,தனலதா,மற்றும் பல்வேறு சான்றோர்களும் செக்கானூரணி வளர்தமிழ் கலை இலக்கியப்பேரவை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பாக ச.முத்துக்கிருஷ்ணன் ச.சிவக்குமார் செய் திருந்தார்கள்.

Tags

Next Story