சிவகங்கையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
அஞ்சலி செலுத்திய தீயணைப்பு வீரர்கள்
மும்பையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு சிவகங்கையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விக்டோரியா துறைமுகத்தில், நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்க கடுமையாக போராடிய போது கப்பலில் இருந்த வெடிப்பொருள்கள் வெடித்து சிதறியதில், தீயணைப்பு வீரா்கள் 66 போ் பலியாகினா், அந்த தினத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி தீ தொண்டு வார விழா கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில்,
இன்று சிவகங்கை ஆட்சியரக பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் செந்தில் குமார், தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் நாகராஜன் ஆகியோரது தலைமையில், தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய பணியாளர்கள் முன்னிலையில் தீயணைப்புப் படை வீரா்கள் பலா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.
Next Story