திருச்சி - 103.1 செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு

திருச்சி - 103.1 செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு

வெப்பநிலை 

ஏப்.6-ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
திருச்சி - 103.1 செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு. இது குறித்து சென்னை வானிலை மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஏப்.3) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனினும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரியில் வட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஏப்.6 வரை ஒரு சில பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்): ஈரோடு - 106.16, பரமத்திவேலூா் - 104.9, சேலம் - 104.54 , வேலூா் 104.18, தருமபுரி - 104, திருச்சி - 103.1, கோவை - 102.56, திருத்தணி - 102.56, மதுரை விமான நிலையம் - 102.56, நாமக்கல் - 102.2, திருப்பத்தூா் - 101.84, மதுரை நகரம் - 101.48, தஞ்சாவூா் - 100.4, பாளையங்கோட்டை - 100.04.

Tags

Read MoreRead Less
Next Story