திருச்சி விமான நிலையம் விரைவில் திறப்பு
திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலைய இரண்டாவது முனைய கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் அனைத்தும் மலைக்க வைக்கின்றன. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக 2வது முனையம் கட்டுவதற்காக இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்தால் ரூ. 951 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் ஒரு வழியாக 5 ஆண்டுகள் கழித்து இப்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜனவரியில் திறப்பு விழா நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story