திருச்சி மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானம்
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தில்லைநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற மார்ச் 1-ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரையாக ஒன்றிய நகர பகுதி பேரூர் கிளைக் கழகங்களில் இல்லங்கள் தோறும் சென்று இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Next Story