திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அதிரடி மாற்றம்

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அதிரடி மாற்றம்

மாநகராட்சி ஆணையாளர் 

தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஆர்.வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துறையின் இயக்குனராக பணியாற்றிவந்த மோகன், முதல்வரின் முகவரி எனும் துறையின் சிறப்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் “முதல்வரின் முகவரி” என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டது. அதாவது, முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு, “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags

Read MoreRead Less
Next Story