திருச்சி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
வாக்காளர் பட்டியல் வெளியீடு
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே உள்ளதால் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வாக்காளர் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 22,91,890 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 11,11,573 ஆண் வாக்காளர்களும், 11,79,985 பெண் வாக்காளர்களும், 332 மாற்று பாலினத்தவர் ஆவார்கள்.
திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 3,04,908 வாக்காளர்களுடன் ஸ்ரீரங்கம் தொகுதி உள்ளது. 2,19,606 வாக்காளர்களுடன் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக லால்குடி தொகுதி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தொகுதி வாரியாக வருமாறு: மணப்பாறை சட்டமன்றத் தொகுதி: ஆண் வாக்காளர்கள் – 1,36,691 பெண் வாக்காளர்கள் – 1,41,486 பிற வாக்காளர்கள் – 13 மொத்தம் – 2,78,190
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி : ஆண் வாக்காளர்கள் – 1,47,549 பெண் வாக்காளர்கள் – 1,57,312 பிற வாக்காளர்கள் – 47 மொத்தம் – 3,04,908
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி : ஆண் வாக்காளர்கள் – 1,30,640 பெண் வாக்காளர்கள் – 1,40,984 பிற வாக்காளர்கள் – 33 மொத்தம் – 2,71,657
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி : ஆண் வாக்காளர்கள் – 1,22,720 பெண் வாக்காளர்கள் – 1,30,817 பிற வாக்காளர்கள் – 63 மொத்தம் – 2,53,600
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி: ஆண் வாக்காளர்கள் – 1,31,023 பெண் வாக்காளர்கள் – 1,36,914 பிற வாக்காளர்கள் – 60 மொத்தம் – 2,67,௯௯௭
லால்குடி சட்டமன்ற தொகுதி : ஆண் வாக்காளர்கள் – 1,06,034 பெண் வாக்காளர்கள் – 1,13,551 பிற வாக்காளர்கள் – 21 மொத்தம் – 2,19,606
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி: ஆண் வாக்காளர்கள் – 1,21,391 பெண் வாக்காளர்கள் – 1,30,866 பிற வாக்காளர்கள் – 43 மொத்தம் – 2,52,300
முசிறி சட்டமன்ற தொகுதி : ஆண் வாக்காளர்கள் – 1,07,797 பெண் வாக்காளர்கள் – 1,13,241 பிற வாக்காளர்கள் – 22 மொத்தம் – 2,21,060 .
துறையூர் சட்டமன்றத் தொகுதி ( தனி) : ஆண் வாக்காளர்கள் – 1,07,728 பெண் வாக்காளர்கள் – 1,14,814 பிற வாக்காளர்கள் – 30
மொத்தம் – 2,22,572 50,749 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 22,028 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்