திருச்சி மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறைத் தோ்வு தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறைத் தோ்வு தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கி தொடா்ந்து 6 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதற்காக 258 மேல்நிலை பள்ளிகளில் 202 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தாண்டு கூடுதலாக 6 புதிய மையங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்புகளில் அறிவியல், தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் செய்முறைத் தோ்வுகளை எழுதுகின்றனா். திருச்சி மாவட்டத்தில் மேல்நிலை அறிவியல் பாடப்பிரிவில் 38ஆயிரத்து 366 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். மேலும், கலை பாடப்பிரிவில் 18 ஆயிரம் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். இத்தோ்வுகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியா்கள், மெட்ரிக் பள்ளி முதல்வா்கள் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனா்.

இவா்களுக்கு, செய்முறைத் தோ்வுகளை நடத்துவது தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலகத்தால் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டு, உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முதுகலை ஆசிரியா்களுக்கு புறத்தோ்வாளராக பணிபுரிய நியமன ஆணைகள் வழங்கப்பட்டு தோ்வை நடத்துகின்றனா். பறக்கும்படை அமைக்கப்பட்டு பள்ளிகள் தோறும் சென்று கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

Tags

Next Story