திருச்சி‌ மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.36 கோடி பறிமுதல்

திருச்சி‌ மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.36 கோடி பறிமுதல்

பணம் பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.36 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகளை செயல்படுத்தும் விதமாகவும், மீறுவோா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 9 குழுக்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 81 பறக்கும் படைகள் , 81 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தோ்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். திங்கள்கிழமை வரை தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் மணப்பாறை பேரவை தொகுதியில் ரூ.40,45,300, ஸ்ரீரங்கம் பேரவை தொகுதியில் ரூ. 74,500, திருச்சி மேற்கு பேரவை தொகுதியில் ரூ. 52,68,920, திருச்சி கிழக்கு தொகுதியில் ரூ. 22,73,500, திருவெறும்பூா் தொகுதியில் ரூ. 2,71,200, லால்குடி தொகுதியில் ரூ. 8,56,670, மண்ணச்சநல்லூா் தொகுதியில் ரூ. 5,83,270, முசிறி தொகுதியில் ரூ. 1,05,480, துறையூா் தொகுதியில்ரூ. 1,33,690-ம் என மொத்தம் ரூ. 1,36,12,530 பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி தொகையில் உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்ததன் அடிப்படையில் ரூ. 27,58,300 சம்பந்தப்பட்ட நபா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. தவிர, காவல்துறையினா் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை வரை ரூ.4,67,722 மதிப்பிலான மதுபானம், கஞ்சா, தங்கம் மற்றும் பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா். தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இத்தகவலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

Tags

Next Story