திருச்சி : நந்தவனமாக மாறிய குப்பைமேடு

திருச்சி மாநகராட்சி 23வது வார்டில் குப்பைமேடாக இருந்த பகுதியை நந்தவனம் போல் மாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்சியில் பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தப்படுகிறது. இந்த வகையில் திருச்சி மாநகராட்சி 23வது வார்டு செவ்ந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் குப்பைகளாக காட்சியளித்த இடத்தை அழகிய பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. தூய்மையான இடமாக 23வது வார்டு ஏரியா மேனேஜர் நளினி தலைமையில் தூய்மை பணியாளர்களால் உருவாக்கப்பட்ட அழகிய நந்தவனம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்குமார், 5வது மண்டல ஏரியா மேனேஜர் விஜயலட்சுமி, திருச்சி மாநகராட்சி இளநிலை பொறியாளர் ரமேஷ் வேதா நிறுவன செயல் தலைவர் கிஷோர், மனித வள மேம்பாட்டு மேலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story