திருச்சி இந்தியாவில் சிறந்த மாநகராட்சி - மேயர் அன்பழகன் நம்பிக்கை

திருச்சி இந்தியாவில் சிறந்த மாநகராட்சி - மேயர் அன்பழகன் நம்பிக்கை

மேயர் அன்பழகன்

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,புதிய மார்க்கெட் போன்றவை அமையும் போது திருச்சி மாநகராட்சி மிகப்பெரிய வளர்ச்சி பெற்று அடுத்த ஆண்டு இந்தியாவிலேயே திருச்சி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக மாறும் என மேயர் அன்பழகன் தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், துர்கா தேவி, ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் பேசிய மேயர் அன்பழகன், திருச்சி மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதற்குமுதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் கே என் நேரு பல்வேறு திட்டங்களை திருச்சி மாநகரத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். மாநகராட்சியில் சிறப்பான பணிகளை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த கமிஷனர், அதிகாரிகள், கவுன்சிலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,புதிய மார்க்கெட் போன்றவை அமையும் பொழுது திருச்சி மாநகராட்சி மிகப்பெரிய வளர்ச்சி பெறும் அடுத்த ஆண்டு இந்தியாவிலேயே திருச்சி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு வழிவக்கும் என்றார் .இந்தக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story