திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் மண்டல தலைவர் தலைமையில் வார்டு குழு கூட்டம்
திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் 5வது மண்டல வார்டு குழு கூட்டம் மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, முன்னிலை வகித்தார்.
திருச்சி புத்தூரில் உள்ள கோ அபிஷேகபுரம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வார்டுகளில் தேவையான அடிப்படை வசதிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கிற பாதாள சாக்கடை பணி, குடிநீர் குழாய் அமைக்கும் பணி, சிமெண்ட் ரோடு, மற்றும் ரோடு போடும் பணி விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு வார்டுகளையும் தூய்மையாக வைத்திருக்கவும் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவும் மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் வலியுறுத்தினார். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், இளநிலை பொறியாளர்கள், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். .