திருச்சியில் 100.58 டிகிரி வெயில் பதிவு
பைல் படம்
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. கடந்த சில தினங்க ளுக்கு முன்பு ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட 10 இடங் களில் வெயில் 100 டிகிரியை தாண்டி இருந்தது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்திருக்கிறது.
அந்த வகையில் நேற்று தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் 5 சதம் அடித்து இருந்தது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங் களில் வெப்பத்தின் அளவு இயல்பை விட 2 டிகிரி அதிகரித்து காணப்படும் என்றும், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி, திருச்சியில் 100.58 டிகிரி என 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.