அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ 2.13 கோடி மோசடி

அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ 2.13 கோடி மோசடி

பைல் படம் 

அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி ஆந்திர தொழிலதிபரிடம் ரூ. 2.13 கோடி மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பாலாஜி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீனிவாசன் (52). இவா் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் 2013 முதல் அரிசி ஏற்றுமதி செய்கிறாா். இந்நிலையில் திருச்சி, தஞ்சாவூா் சாலையைச் சோ்ந்த நிரஞ்சன்குமாா் என்பவா் தன்னிடம் 720 மெட்ரிக் டன் அரிசி இருப்பதாகவும், அதை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.

இதையடுத்து வெனிசுலா நாட்டில் உள்ள குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அரிசியை அனுப்பி வைக்கச் சொல்லி நிரஞ்சன்குமாரிடம் ஸ்ரீனிவாசன் ரூ. 2.13 கோடி கொடுத்துள்ளாா். 2020 மே முதல் ஜூலை வரை இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிரஞ்சன்குமாா் கூறியபடி வெனிசுலா நாட்டுக்கு அரிசி அனுப்பவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த ஸ்ரீனிவாசன் பணத்தைத் திருப்பி கேட்டாா். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த நிரஞ்ன்குமாா் மிரட்டல் விடுத்தாராம். இதனால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநிவாசன் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளா் பாரதி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

Tags

Next Story