சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா
சமயபுரம் மாரியம்மன்
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். பஞ்சபூதங்கள், ஐம்பெரும் தொழில், ஐம்பெரும் கலை, ஐம்பெரும் பீடம் மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள், இவற்றை விளக்கும் தத்துவமாக இந்த பஞ்சப்பிரகார உற்சவம் உள்ளது. இக்கோவிலில் அக்னி நட்சத்திரத்தின் உஷ்ணு கிராந்தியை தணிப்பதற்காக கடந்த 5 ந்தேதி வசந்த உற்சவம் தொடங்கியது.
இந்த உற்சவம் வருகி்ன்ற 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைப்பெற்றுது. தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவில் அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 9 ம் நாளான நேற்றிரவு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று 14-ந்தேதி பஞ்சப்பிரகார உற்சவம் நடக்கிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டாச்சாரியார்கள் வடகாவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் கொண்டு வருதல் முற்றும் யானை மீது தங்கக் குடத்தில் தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடை பெறுகிறது.
அன்று மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வெள்ளி விமானத்தில் அம்மன் எழுந்திருளி நள்ளிரவு 12 மணிக்கு வீதி உலா வந்து பக் தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் மூலஸ்தான கருவ றையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று தங்க கொடிமரம், இரண்டாவது சுற்று தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் நான் காவது சுற்று, கீழரத வீதி மேல ரதவீதி வடக்கு ரத விதி ஐந்தாவது சுற்றாக வும் பஞ்சப்பிரகார உற்ச வம் நடக்கிறது. 15-ந் தேதி இரவு அம் மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார்.
16-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளுகிறார். 17-ந் தேதி தங்க கமல வாகனத்திலும், 18- ந்தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளி காமதேனுவாக னத்திலும், 20-ந் தேதி மர கற்பக விருட்ச வாகனத் திலும், 21-ந்தேதிமர காம தேனு வாகனத்திலும். 22-ந் தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்தி லும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.