திருச்சி : குள்ளநரி தோலை விற்க முயன்ற இளைஞர் கைது

திருச்சி : குள்ளநரி தோலை விற்க முயன்ற  இளைஞர் கைது

குள்ளநரி தோலை விற்க முயன்ற திருச்சி இளைஞர் கைது

வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் வயலூர் அருகே இனம்புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின் படியும், திருச்சி வன சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் இனாம் புலியூர் கிராம தெற்கு மேட்டு தெருவை சேர்ந்த சி. லட்சுமணன் மகன் .அய்யர் (26) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது குள்ளநரியின் தோல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அவரிடம் விசாரணை செய்ததில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இனாம் புலியூர் கிராம காட்டு பகுதியில் வேட்டை நாயை வைத்து குள்ளநரியை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டு தோலை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 (திருத்தியது 2022) பிரிவு 2(2)-ன் படி குள்ள நரியின் தோல் விலங்கு பொருட்கள் ஆகும். பிரிவு 2(16)-ன் படிபட்டியல் 1 பகுதி அ வரிசை எண் 22-ல் குள்ளநரி வகைப்படுத்தப்பட்டுள்ளது .பிரிவு 9 -ன் படி வேட்டை நாயை வைத்து குள்ள நரியை வேட்டையாடிய குற்றம். பிரிவு 39(1) -ன் படி குள்ள நரியின் தோல் அரசின் சொத்தாகும். பிரிவு 49-ன் படி குள்ள நரியின் தோலை விற்பனை செய்ய தடை. ஆகிய பிரிவின் கீழ் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 5 முன்பு ஆஜர்படுத்தி 15 நாள் அடைப்பு காவல் உத்தரவு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story