பல்கலைக்கழகத் தேர்வில் டிரினிடி கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை !!!

பல்கலைக்கழகத் தேர்வில் டிரினிடி கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

தங்கப் பதக்கம் வென்ற நாமக்கல் - டிரினிடி மகளிர் கல்லூரி மாணவி. நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பிகாம் பாடப்பிரிவு மாணவி பா. ஷிவானி ஶ்ரீ , பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் (2020-23) முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். மேலும், எம். எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் வா. ஆயிஷாநிலோபர், 3-வது ரேங்க், பிஏ ஆங்கிலம் பாடப்பிரிவு மாணவி இ. த்ரிஷா, 6-வது ரேங்க் மற்றும் மு. கிருத்திகா, எம். எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் 8வது ரேங்க்கும் பெற்று கல்லூரிக்கு பெருமையினை சேர்த்துள்ளனர். பல்கலைக்கழகத் தேர்வுகளில் சாதனை புரிந்த மாணவிகளை கல்லூரித் தலைவர் கே நல்லுசாமி, செயலர் எஸ் செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம் ஆர் லட்சுமிநாராயணன், வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன், துணை முதல்வர் ஆர் நவமணி, துறைத் தலைவர்கள் எம் சசிகலா, என் இளமதி, எல். தீபிகா, நிர்வாக அலுவலர் என் எஸ் செந்தில்குமார் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் பாராட்டினர். தங்கப் பதக்கம் வென்ற பா. ஷிவானி ஶ்ரீ, 2024-25-ம் கல்வி ஆண்டில் இக்கல்லூரியில் தொடர்ந்து எம். காம். பாடப் பிரிவு பயின்று வருகின்றார். அவருடைய படிப்பிற்கான முழு கல்விக் கட்டணத்தினை கல்லூரி நிர்வாகம் ஏற்பதாக கல்லூரித் தலைவர் கே நல்லுசாமி தெரிவித்தார்.

Tags

Next Story