நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில் ஆபத்தான பரிசல் பயணம்!
திருப்பூர் அருகே வெங்கலபாளையம் பகுதி நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றை கடப்பதற்கு கிராம மக்கள் ஆபத்தான பரிசல் பயணம். ஆற்றை கடப்பதற்கு இரு கறைகளிலும் கம்பங்கள் நட்டு அதில் கம்பிகளை கட்டி பரிசலில் ஏறிய பின்பு அந்த கம்பிகளை பிடித்தபடி பரிசல் மூலம் நொய்யல் ஆற்றைக் கடந்து செல்லும் கிராம மக்கள். தரைபாலம் கட்டி தர வேண்டும் என்று பல முறை அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் பாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாங்கண்ணி, பாப்பம்பாளையம், கணபதிபாளையம், வயக்காட்டுப்புதூர், வெண்கல பாளையம் ஆகிய ஐந்து குக்கிராமங்கள் உள்ளன,இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசிக்கின்றனர், இந்த கிராம பகுதிகளில் இருந்து நொய்யல் ஆற்றின் மறுக்கரைக்கு செல்ல வேண்டுமெனில் பாலம் வசதி இல்லாததால் ஆற்றை கடந்து செல்வதற்கு இரு கறைகளிலும் கம்பங்கள் நட்டு அதில் கம்பிகளை கட்டி பரிசலில் ஏறிய பின்பு அந்த கம்பிகளை பிடித்த படி பரிசல் மூலம் நொய்யல் ஆற்றைக் கடந்து செல்லும் ஆபத்தான பரிசல் பயணம் மேற் கொண்டு வருகின்றனர். வெங்கலபாளையம் பகுதியில் இருந்து மறுகறையில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் 10 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டும்,
மரப்பாலம்,கொடுமணல், கத்தாங்கன்னி ,வழியாக செல்ல வேண்டிய ஒரு அவல நிலை உள்ளது,இதன் காரணமாக மக்கள் ஆபத்தான முறையில் நொய்யல் ஆற்றை கடப்பதற்கு பரிசல் மூலம் இதுபோன்று இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஆபத்தான பரிசலை பயணம் செய்கின்றனர், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது,
இந்த வெள்ள நீரானது ஆற்றில் கரைபுரண்டு ஓடுவதால் வெங்கலபாளையம் பகுதியில் கிராம மக்கள் ஆற்றை கடப்பதற்கு ஆபத்தான முறையில் பரிசல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் ,கம்பிகளை பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்கும் அவல நிலை காணப்படுகிறது, மூன்று ஆண்டுகளாக இந்த பகுதியில் ஆற்றைக் கடப்பதற்கு தரைப்பாலும் அமைத்து தர கோரி கிராம மக்கள்,விவசாயிகள் இந்த அரசுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளிக்கும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.