அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

முப்பெரும் விழா

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை மாதிரிப்பள்ளியில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடையின் கல்வித் தந்தை ஏ பி.காசி நாடார் - பால்த்தாயம்மாள் பள்ளிக்கல்வித்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு கல்வியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், பள்ளி தலைமையாசிரியர் சேகர், உதவி தலைமை ஆசிரியை ஜெயப்ரியா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனியசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் வேல்கனி பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜ், வெள்ளைச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் உட்பட ஆசிரிய - ஆசிரியைகள் மாணவ - மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story